கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் கொனஹேன முகாமிற்கு கிடைத்த தகவலுக்கைமைய, கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (19) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 297 கிராம் கேரள கஞ்சாவும்,  போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டியதாக கருதப்படும் 40,000 ரூபா பணமும், இரண்டு கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 4 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ராகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.