கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது

கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 150,000 ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசேட அதிரடிப்படையின் விசேட குழுவொன்று நேற்று (03) மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா, அஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.