கைக்குண்டுடன் ஒருவர் கைது

காவல்துறை விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட சுற்றிவளைப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் திக்வெல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட அளுத்கொட பிரதேசத்தில் சுற்றிவளைப்பொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (27) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு SFG வகையைச் சேர்ந்ததெனவும், சந்தேகநபர் நகுலகமுவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக திக்வெல்ல காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.