கைவிடப்பட்ட காணிகளில் பயிர் செய்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை – மகிந்த அமரவீர

நாடளாவிய ரீதியில் கைவிடப்பட்டுள்ள விவசாயத்திற்கு ஏற்ற காணிகளில் பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்காக குறித்த காணிகளை 5 வருடங்களுக்கு பொறுப்பேற்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய அமைச்சில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கமநல சேவை திணைக்களத்தினால் விவசாய காணிகள் இனங்காணப்பட்டு, பயிரிட விரும்புபவர்களுக்கு அதனை கையளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளது.

நாடளாவிய ரீதியில், சுமார் ஒரு இலட்சம் ஹெக்டயர் தரிசு நிலங்கள் காணப்படுகின்றன.

அவற்றில் சுமார் 50 ஆயிரம் ஹெக்டயர் அளவான காணிகள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள பொருத்தமானதாக காணப்படுவதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Comments are closed.