கொக்குகளை வேட்டையாடிய மூவர் கைது

அக்கரைப்பற்று விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, கொக்குகளை வேட்டையாடிய மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

திருக்கோவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தம்பட்டி பாலத்திற்கு அருகில் வாயு துப்பாக்கியை பயன்படுத்தி, இரு கொக்குகளை இவர்கள் வேட்டையாடியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 21, 42 மற்றும் 43 வயதுகளை உடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர்களிடம் இருந்து வேட்டையாடப்பட்ட இரு கொக்குகள் மீட்கப்பட்டதுடன், வாயு துப்பாக்கியொன்றும், 126 ஈய உலோக குண்டுகளும், கத்தியொன்றும் மற்றும் மகிழுந்து ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Comments are closed.