கொரோனா தடுப்பூசி சிறுவர்களுக்கு பரிசோதனை!

ரஷியாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி தற்போது, பெரியவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா உலகளவில் தலைவிரித்தாடும்போது அமெரிக்காவின் பைசர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராஜெனேக்கா ஆகியவற்றுடன் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பு மருந்தும் பாதுகாப்பானவை, எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக்கூடியவை என்பதை உறுதி செய்வதில் கடும் போட்டியாக திகழ்ந்தது.

தற்போது உலகளவில் இந்த மூன்று தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் உள்பட மேலும் பல மருந்துகளும் பயன்பாட்டில் உள்ளன.

தற்போது உலகளவில் வயது மூத்த நபர்களுக்கு, முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வரும் கோடைக்காலத்தில் சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஸ்புட்னிக்-வி தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோடைக்காலத்தில் சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று தடுப்பூசியை கண்டுபிடித்த கமாலேயா ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் அலேக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் சிறிய அளவு டோஸ் சிறுவர்களுக்கு கொடுப்பது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.