கொரோனா தொற்றினால் மேலும் 21 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட இந்த மரணங்களில் 06 பெண்களும், 15 ஆண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது.

Comments are closed.