கொரோனா தொற்றுடன் காணாமல்போன இளைஞர் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டார்

கொரோனா தொற்றுடன் நேற்று மாலை முதல் காணாமல் போன சபுகஸ்கந்தையை சேர்ந்த 22 அகவையை கொண்ட இளைஞர் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டார்.

சபுகஸ்கந்தையின் மாகோல என்ற இடத்தில் வைத்து இவர் கண்டுபிடிக்கப்பட்டார். சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போதே அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

இவர் கண்டுபிடிக்கப்படும் போது ஒரு யுவதி மற்றும் அவரது பெற்றோருடன் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாதிக்கப்பட்டவரை அவர்கள் வேண்டுமென்றே தங்க வைத்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.