கொரோனா மட்டுமன்றி இனவாத ஊடகங்களுடன் போராட வேண்டிய நிர்பந்த நிலையிலுள்ள மக்கள்!

அட்டுலுகமை மக்கள , கொரோனாவுடன், மட்டுமன்றி இனவாத ஊடகங்களுடன் போராட வேண்டிய நிர்பந்த நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அட்டுலுமகயை தனிமைப்படுத்தி ஒரு மாத காலம் கடந்து விட்டது. அட்டுலுகமை நான் பிறந்த ஊர் (தற்போது அட்டுலுகமைக்கு வெளியில் வசிக்கின்றேன்).

பல கட்டங்களில் அட்டுலுகமை தொடர்பாக ஒரு கட்டுரை எழுத வேண்டும் என நினைத்தாலும் ஊரை ஒழுங்குபடுத்த வேண்டி பல நடவடிக்கைகளை செய்தாக வேண்டிய நிர்பந்த சூழ்நிலையில் ஒரு கட்டுரை எழுதக் கூட நேரம் கிடைக்கவில்லை, பிரச்சினையின் பரிமாணம் அவ்வளவு பெரியது.

களுத்துரை மாவட்டத்தின் அதிக சனத்தொகை அடர்த்தி கொண்ட கிராமம் அட்டுலுகமை. தற்போது அங்கு கொரோனா தொற்றளர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டிவிட்டது.

Comments are closed.