கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர் கைது

ஹோமாகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிட்டிபன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னர் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம -பிட்டிபன தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று (13) ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments are closed.