கொழும்பிலிருந்து ஹப்புத்தளைக்குச் சென்ற மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொழும்பிலிருந்து ஹப்புத்தளைக்குச் சென்ற மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்குளி பகுதியில் இருந்து ஹப்புத்தளை பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்றிருந்த மேற்படி மூவரும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடி வருவதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.