கொழும்பில் கடும் வாகன நெரிசல்

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதனால் கொழும்பில் பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஒருகொடவத்தை, ஹோட்டன் பிரதேசம், பம்பலப்பிட்டி, கொம்பனித்தெரு உள்ளிட்ட, பல பகுதிகளின் பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாள், வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒருகொடவத்தை சந்தியில் உள்ள, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், ஏற்பட்டுள்ள வாகன நெரிசல் காரணமாக, புதிய களனி பாலத்தில், பேலியகொடை நோக்கிய திசையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், கொழும்புக்கு அப்பால், ஏனைய சனநெரிசல் மிக்க நகரங்களின், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால், வாகனஙகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றடைமையால், குறித்த பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.