கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நேற்றைய தினம் 484 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேற்படி தொற்றாளர்களில் ஐவர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் என்பதுடன், ஏனைய 55 பேருக்கு சரியான வதிவிட முகவரிகள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் 121 தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கம்பஹாவில் 110 பேரும்,  காலியில் 30 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைதவிர ஏனைய 15 மாவட்டங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 45,726 ஆக அதிகரித்துள்ளது.

Comments are closed.