கொழும்புத் துறைமுகத்தின் ’கிழக்கு முனையம் விற்கப்படாது’ : பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தையோ அல்லது அதன் ஒருபகுதியையோ வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு எந்தவிதமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்ஷங்கர், கொழும்பில் நிற்கும் சூழ்நிலையில், பாராளுமன்றத்தில், ‘பிரதமரிடம் கேளுங்கள்’ நேரத்தில், ஜே.வி.பியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பியான அநுரகுமார திஸாநாயக்கவால், கொழும்புத் துறைமுகம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘கொழும்புத் துறைமுகத்தில் ஏற்பட்டிருக்கும் கப்பல் தரித்துநிற்கும் நெரிசல் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்புத் துறைமுகத்தின் முழு பகுதியையோ ஒரு பகுதியையோ அல்லது அதை நிர்வகிக்கும் பொறுப்பையோ வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு, அரசாங்கத்தால் எந்தவிதமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை’ என்றார்.

Comments are closed.