கொழும்பு – கண்டி தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – கண்டி தொடருந்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து இன்றைய தினம் 5 தொடருந்து சேவைகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, இன்றைய தினமும் கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி ஊடாக ஒரு வழி போக்குவரத்து மாத்திரமே இடம்பெறும் எனக் கேகாலை மாவட்ட செயலாளர் மகிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.

மூடப்பட்டுள்ள வீதியில் தொடர்ந்தும் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.