கொழும்பு மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று!

நாட்டில் 674 கொரோனா தொற்றாளர்கள் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் 174 பேர் கொழும்பு மாவட்டத்திலே பதிவாகியுள்ளனர்.

இவ்வாறு, கொழும்பு மாவட்டத்தில் நேற்றையதினம் பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் சிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்கள் என கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 26 பேரும், மருதானை பகுதியைச் சேர்ந்த 20 பேரும், தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 18 பேரும், தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 10 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 8 பேருக்கும், புதுக்கடை பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கும், வெள்ளவத்தையைச் சேர்ந்த 5 பேருக்கும், கிருலப்பனை மற்றும் கொம்பனி வீதி ஆகிய பகுதிகளில் தலா நான்கு பேருக்கும் நேற்றையதினம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவாட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 491  ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில்153 பேருக்கு நேற்றையதினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது

மேலும், களுத்துறை மாவட்டத்தில் 110 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 50 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 26 பேரும்  நேற்றையதினம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின்  எண்ணிக்கை 37 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனாதொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 54 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 32 ஆயிரத்து 701 பேர் குணமடைந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 162 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.