கொழும்பு மாவட்டத்தில் நாளை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு

கொழும்பு நிர்வாக மாவட்டத்தில் இன்று நண்பகல் 12 முதல் நாளை (14) அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, பதில் ஜனாதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் நேற்று நண்பகல் முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, இன்று அதிகாலை 5 மணியுடன் நீக்கப்பட்டிருந்தது.

Comments are closed.