கொழும்பு மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!!

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கொழும்பு மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதலுடன் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 412 பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளது.

அந்தவகையில் திம்பிரிகசாய, ஹோமாகம, கெஸ்பேவா, தெஹிவளை, மொரட்டுவ, கொலன்னாவ மற்றும் சீதாவாக்கை பகுதிகளில் உள்ள பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Comments are closed.