கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் 3 பகுதிகள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பு – 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 03 வீதிகள் இன்று (05) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புனித அன்ரூஸ் வீதி, புனித அன்ரூஸ் மேல் மற்றும் கீழ் வீதி ஆகியன இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் (04) அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் பெரும்பாலானோர் குறித்த பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.