கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்றத்தில் சில பிரிவுகளை மூட நடவடிக்கை!

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்றத்தில் சில பிரிவுகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சபாநாயகரின் அலுவலகமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அவர் தன்னை சுய தனிமைக்கு உட்படுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு பாதுகாப்பு வழங்கிய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் சாரதி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான உப பொலிஸ் பரிசோதகர் நாடாளுமன்ற தபாலகத்துக்குச் சென்றுள்ளதால் அதனை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.