கோகோ-கோலா குடித்து திடீரென உயிரிழந்த இளைஞர்

சீனாவில் இளைஞர் ஒருவர் 1.5 லிட்டர் கோகோ-கோலா குடித்து திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 1.5 லிட்டர் கோகோ-கோலாவை வாங்கி பத்தே நிமிடத்தில் குடித்து முடித்ததையடுத்து சில மணி நேரத்தில் அவரது வயிறு வீங்கியுள்ளது.

அத்துடன் நேரம் செல்ல செல்ல அவருக்கு கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து அவரது பெற்றோர்கள் சாவோயாங் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவர் குடலில் அசாதாரண வாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அளவுக்கு அதிகமாக குளிர்பானம் அருந்தியதால் கல்லீரலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உருவாகியதால் நரம்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் போதே அந்த இளைஞர் உயிரிழந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.