கோதுமை மா விலை 40 ரூபாவினால் அதிகரிக்கிறது

கோதுமை மாவின் விலையை ப்ரீமா நிறுவனமும் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளதென விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கோதுமை மா விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று  (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.