கோலி, ரோகித் சர்மாவிற்கு சவால் அளிக்கும் பாபர் அசாம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 891 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி 811 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் 795 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 791 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் பும்ரா மட்டும் முதல் 10 இடங்களுக்குள் (6-வது இடம் ) நீடிக்கிறார்.

Comments are closed.