க்ளைபோசெட் பக்கற்றுகளுடன் இருவர் கைது

நாட்டுக்குக் கொண்டு வரத் தடை செய்யப்பட்டுள்ள, பெருந்தொகையான க்ளைபோசெட் இரசாயனங்களுடன் இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட இரு வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது, இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைதான சந்தேகநபர்களிடமிருந்து தலா 100 கிராம் நிறையுடைய 1,251 க்ளைபோசெட் பக்கற்றுகளை கைப்பற்றியுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கைதானவர்கள் சங்கானையைச் சேர்ந்த 48 மற்றும் 60 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட க்ளைபோசெட்டின் மொத்தப் பெறுமதி 562,450 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், க்ளைபோசெட்டுடன் மேலதிக விசாரணைகளுக்காக யாழ் மாவட்ட விவசாய பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.