க.பொ.த உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

இவ்வாண்டுக்கான க.பொ.த உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.