க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது
தற்போது நடைபெற்று வருகின்ற கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சையில் பரீட்சார்த்திகளுக்கு பதிலாக பரீட்சைக்கு தோற்றிய மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை காவல்துறை பேச்சாளர் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
களுவில பரீட்சை மையத்தில் கணித பரீட்சைக்காக தோற்றவிருந்த பரீட்சார்த்திக்கு பதிலாக பரீட்சைக்கு தோற்றிய நபர் ஒருவர் அனுராதபுரம் – ஹிதொகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 21 வயதான இளைஞர் ஒருவர் என்பதுடன், தனது உறவினர் ஒருவருக்காக பரீட்சையில் தோற்றியிருக்கிறார் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.