சகல அரச கட்டடங்களையும் மீள கையளிக்க போராட்டக்காரர்கள் தீர்மானம்

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை உள்ளிட்ட  தாம் கையகப்படுத்தியுள்ள சகல அரச கட்டடங்களையும் மீள கையளிக்க காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி நடத்தப்பட்ட மாபெரும் போராட்டத்திற்கு போராட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட கட்டடங்களை கைப்பற்றப்பட்டன.

அத்துடன், நேற்று மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு போராட்டத்தையடுத்து, பிரதமரின் அலுவலகமும் போராட்டக்காரர்களின் வசமானது. இந்நிலையில், நாடாளுமன்ற கட்டடத்தொகுதியை சுற்றிவளைப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி முப்படை மற்றும் காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அலரிமாளிகையை மீண்டும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமோ அல்லது பாதுகாப்பு தரப்பினரிடமோ கையளிக்க தீர்மானித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் ஒருவரான மனோஜ் முதலிகே தெரிவித்துள்ளார்.

இதுவரையான காலப்பகுதியில் அலரி மாளிகைக்கு எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பினை வழங்கினோம்.

அலரி மாளிகையை மக்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அதனை பெரும்பாலானவர்கள் பார்வையிடுவதற்காக வருவதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் கலந்துரையாடி அலரி மாளிகை தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

Comments are closed.