சகல பாடசாலைகள், தனியார் வகுப்புகளுக்கு பூட்டு

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் மேல் மற்றும் வடமேல் மாகாண பாடசாலைகளை மாத்திரம் தற்காலிகமாக மூடுவதற்கு கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில், இன்று சகல பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, சகல தனியார் வகுப்புகளுக்கும் தடை ​விதிக்கப்பட்டுள்ளன.

Comments are closed.