சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 12 பேர் கைது

படகுமூலம் சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 12 பேர் மன்னார் கடல்பரப்பில் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 12 பேரும், திருகோணமலையில் வசித்துவரும் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அவர்களில், 5 சிறுவர்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், அவர்களை இந்தியாவுக்கு சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற 2 படகோட்டிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்க, கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

Comments are closed.