சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 120 பேர் கைது

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற்ற 120 பேரை காவல்துறையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

காவல்துறையினருடன் இணைந்து இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கிராண்ட்பாஸ் – கஜிமா வத்தை பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Comments are closed.