சட்டவிரோதமானமுறையில் 1,128 கிலோ கிராம் மஞ்சளுடன், மோதரை பிரதேசத்தில் இருவர் கைது!
சட்டவிரோதமானமுறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 1,128 கிலோ கிராம் மஞ்சளுடன், மோதரை பிரதேசத்தில் இருவர் கைதுசெய்யப்ட்டுள்ளனர்.
மோதரை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேற்;படி மஞ்சள் தொகை கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.