சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது

களனி – கோணவல – கொஹொல்வில வீதியில், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 264,200 சிகரெட்டுகள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் வத்தளை – ஹுணுப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய, களனி – கோணவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அவ்வீட்டிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மேலும் ஒரு தொகை சிகரெட்டுகளுடன் 48 வயதான நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் 2 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக களனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.