சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 14 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சிகரெட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசேட அதிரடிப் படை தலைமையகத்தின் விசேட சுற்றிவளைப்பு பிரிவினருக்கு, கடற்படை புலனாய்வு பிரிவினர் வழங்கிய இரகசிய தகவலுக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வத்தளை பிரதேசத்தில் வர்த்தக நிலையமொன்றில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, வத்தளையைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வத்தளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Comments are closed.