சத்தம்போட்டால் சட்ட நடவடிக்கை

கல்விப் பொதுத்தராத சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் வகையில் செயற்படும் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கல்விப் பொதுத்தராத சாதாரண தரப் பரீட்சை, இன்று (01) ஆரம்பமான நிலையில், அவர்கள் பரீட்சை எழுதும்போது, பாரிய சத்தங்களை எழுப்பும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எனவே, பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அருகில் வசிப்போர், தங்கள் வீடுகளில் சத்தமாக தொலைக்காட்சி, வானொலிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் பாரிய சத்தங்களை எழுப்பவேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தங்களது வீட்டுக்குள் மாத்திரம் கேட்கும்படி, தத்தமது மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கல்வி அதிகாரிகள், சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி, பொலிஸார், பரீட்சை மத்திய நிலையங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவர் என்றும் அவர் மேலும் கூறினார்.

Comments are closed.