சபுகஸ்கந்த உள்ளிட்ட சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன : அஜித் ரோகன!

சபுகஸ்கந்த  பகுதியில் கொரோனா  தொற்றுக்குள்ளான நிலையில் தப்பிச்சென்ற இளைஞன் தங்கியிருந்த குடியிருப்பு உள்ளிட்ட மேலும் சில குடியிருப்புகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த பகுதியைச் சேர்ந்த 6 குடியிருப்புகளைச் சேர்ந்த 22 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகொல பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞன் ஒருவன் நேற்று முந்தினம் மாலை வீட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இந்த நிலையில், குறித்த இளைஞனை கண்டுபிடிப்பதற்கு சப்புகந்த பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியிருந்தனர்.

இதற்கமைய, கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொற்றுக்குள்ளான குறித்த இளைஞன் மகொல வடக்கு பகுதியைச் சேர்ந்த வீடு ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, தொற்றுக்குள்ளான இளைஞன் மீண்டும் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த இளைஞன் தங்கியிருந்த குடியிருப்பில் உள்ள மூவர் உள்ளிட்ட அவர்களுடன் தொடர்புடையவர்கள் சுய தனிமைப்ப்டுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, தொற்றுக்குள்ளான குறித்த இளைஞனை வீட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கியவர்கள் தொடர்பில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.