சம்பளத்தில் விஜய்யை நெருங்கிய அஜித் !

அஜித் 61 படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை போனிகபூர் தயாரித்து வரும் நிலையில்,   அஜித்குமாரின் 62 வது படத்தின் சம்பளம் பற்றிய் தகவல் வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன் வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் விக்னேஷ் சிவன் செயல்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஜித், அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் தவிர வேறு எந்த கலைஞர்களும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதுபோல, படத்தின் எடிட்டராக தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஜித்62 படத்தில் நடிக்க நடிகர் அஜித்குமாருக்கு விஜய் பெறும் அளவுக்கு ரூ.100 கோடி அளவில் சம்பளம் கொடுப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை,  ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித்குமார் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Comments are closed.