சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண தமிழ் பெண்களுக்கு அரிய வாய்ப்பு!

எதிர்வரும் 08.03.2021 (அடுத்த மாதம்) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் முற்று முழுதாக மகளிர் பங்குகொள்ளும் 03 மாதகால தற்காப்புக்கலை (கராத்தே) இலவச பயிற்சிநெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சிநெறியானது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் இரு நிலையங்களில் இடம்பெறும் எனவும் வடமாகாணத்தை வதிவிடமாகக் கொண்ட அனைத்து யுவதிகளும் கலந்துகொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பயிற்சிநெறிக்கான இலவச சீருடை மற்றும் பயிற்சி முடிவில் சான்றிதழ் என்பனவும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளதுடன் விண்ணப்பப்படிவங்களை வடமாகாண கல்வி அமைச்சின் இணையத்தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்யவோ அன்றி நிகழ்நிலையில் படிவத்தை பூர்த்தி செய்யவோ அல்லது எமது அ லுவலக வரவேற்பு உத்தியோகத்தரிடம் நேரடியாக பெற்றுக்கொள்ளவோ முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, விண்ணப்பப் படிவம் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “மகளிர் தற்காப்புக்கலை பயிற்சிநெறி – 2021” எனக்குறிப்பிட்டு தபால் மூலம் அல்லது நேரடியாக விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி: செயலாளர், கல்வி அமைச்சு, வ.மா,செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.

Comments are closed.