சாதாரணதரப் பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை நால்வர் கைது..!
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
பரீட்சை நிறைவடைந்த நேற்றைய தினம் போலியாக பரீட்சைக்கு தோற்றிய ஒருவர் பலாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.