சாதாரணதர பரீட்சை தொடர்பில் வெளிவந்த விசேட அறிவிப்பு!!

தற்போது நடைபெற்று வரும் சாதாரண தரப் பரீட்சையின் நுண்கலை செய்முறை பரீட்சையை மே மாதத்தில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

கோட்டே ஆனந்த பரீட்சை மண்டபத்திற்கு விஜயம் செய்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, சாதாரண தரப் பரீட்சையை வெற்றிகரமான முறையில் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இதற்கு சகல அதிகாரிகளும் உயர்ந்தபட்ச ஆதரவை வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும் சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments are closed.