சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றச் சென்ற 10 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கு..!

நல்லதண்ணி தமிழ் மஹா வித்தியாலயத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்ற சென்ற மாணவர்கள் 10 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

அவர்களில் 9 பேர் லக்சபான தோட்ட வைத்திய அதிகாரியிடம் சிகிச்சை பெற்று பின்னர் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் ஒரு மாணவி மஸ்கெலிய மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைளிக்கப்பட்ட பின்னர் பரீட்சையில் தோற்றியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.