சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் ஒருவர் டெங்குக் காய்ச்சலால் பலி!!

ஏறாவூரில் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், காதியார் வீதியை அண்டி வசிக்கும் பஜிர் நாதிர் எனும் மாணவன் இவ்வாறு டெங்குக் காய்ச்சலால் மரணித்துள்ளார்.

குறித்த பரீட்சைக்குத் தோற்றுவதற்கு முதல் நாள் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில், குறித்த மாணவன் சிகிச்சை பயனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Comments are closed.