சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்தல்..!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் போது, தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளார்.

இதனை பின்பற்றாத சாரதிகளுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவதானமாக செயற்படுமாறும் சாரதிகளுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Comments are closed.