சிறில் காமினி சிஐடியில் முன்னிலையானார்

வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய, அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இரண்டாவது தடவையாக முன்னிலையான அருட்தந்தை சிறில் காமினி சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து அருட்தந்தை சிறில் காமினி வெளியிட்ட கருத்து தொடர்பில், தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தார்.

இதற்கமைய, அருட்தந்தை சிறில் காமினியிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.