சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்க இந்திய பிரதமர் இணக்கம் – ஜனாதிபதி

அடுத்த சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை உடனடியாக பெற்றுக்கொடுப்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் எல்லைத் திட்டத்திலான இந்த உரத் தொகுதி நாட்டிற்கு கிடைக்கப்பெறும் தினத்திலிருந்து 20 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உமா ஓயா மற்றும் மொரகாகந்தை திட்டங்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்து பெரும்போகத்தின் நன்மைகளை பெறுவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நிதியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.