சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இரு பிள்ளைகளின் தந்தைக்கு கிடைத்த தண்டனை!

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இரு பிள்ளைகளின் தந்தைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 34 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

இந்தத் தண்டனையை 15 வருடங்களில் நிறைவு செய்ய வேண்டுமென கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த உத்தரவிட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு ஆளான சிறுமிக்கு 02 இலட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த நஷ்டஈட்டு தொகையை செலுத்த தவறினால் பிரதிவாதிக்கு 05 வருட சாதாரண சிறைத் தண்டனையை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதற்கும் மேலதிகமாக பிரதிவாதிக்கு 10,000 ரூபா தண்டப் பணத்தையும் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Comments are closed.