சிறுமி உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 453 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார்.

இதன்படி பருத்துறையில் ஏற்கனவே தொற்றுக்குள்ளான ஆசிரியை ஒருவருடைய நெருங்கிய உறவு வட்டத்தில் உள்ள 9 வயதான சிறுமி ஒருவருக்கும், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சிறைச்சாலையில் இருந்து விடுதலையான ஒருவருக்கும்,

மன்னாரிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பவதி பெண் ஒருவர் உட்பட 3 பேருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார்.

Comments are closed.