சிறுவன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து 8 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

(19) முற்பகல் பெற்றோர் தொழிலுக்குச் சென்றுள்ள நிலையில் குறித்த சிறுவன் கிணற்றில் தூண்டில் போட்டு விளையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இதனையடுத்து அயலவர்கள் இணைந்து கிணற்றில் தேடுதலில் ஈடுபட்டபோது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments are closed.