சிறுவர்களிடையே பரவும் புதிய வைரஸ்

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் தொற்று நோய் ஒன்று தற்போது பரவிக்கொண்டிருப்பதாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் பிரிவின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தகவல் வெளியிட்டுள்ளார்.

6 வயதுக்கு குறைவான சிறுவர்களிடையே இந்த நோய் தொற்று விரைவாக பரவுவதாக எமது செய்தி பிரிவிடம் அவர் தெரிவித்தார்.

வாய்க்குள்ளும், உடலின் வெவ்வேறு பகுதிகளிலும் சிவப்புநிற புள்ளிகள் ஏற்படுதல் இந்த நோய்க்கான பிரதான அறிகுறியாகும்.

அத்துடன், சில சந்தர்ப்பங்களில் சிறுவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும் நிலையும் உள்ளது.

இந்த நோய் நிலை காரணமாக சிறுவர்களுக்கு உணவு உட்கொள்வதில் சிக்கல் ஏற்படும்.

இந்த நோய் அறிகுறிகளுடன் கூடிய அதிகளவான சிறுவர்கள், கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைப்பெற வருவதாக அந்த வைத்தியசாலையின் சிறுவர் நோய் பிரிவின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இந்தத் தொற்று நோய்க்கு விரைவில் சிகிச்சையளிக்காவிட்டால், சிறுவர்களின் நகங்களும் உதிரக் கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.