சிலாபத்தில் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பஞ்லோக தெய்வ சிலை கொள்ளை!

சுமார் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பஞ்லோக தெய்வ சிலை சிலாபம் – முன்னேஸ்வரத்தில் அமைந்துள்ள மயான காளியம்மன் ஆலயத்திலிருந்து கொள்ளையிடப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 29 ஆம் திகதி அதிகாலை 1.30 அளவில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக ஆலயத்தின் பொறுப்பாளர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் உரிமை சம்பந்தமாக இரண்டு தரப்பினருக்கு இடையில் இருந்து வரும் தகராறு காரணமாக தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. ஒரு தரப்பினர் ஆலயத்திற்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட சிலை ஆலய மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தாகவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இந்த தெய்வ சிலை ஒருவரால் திருப்பட்டிருந்தது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Comments are closed.