சில பகுதிகளில் இன்று 16 மணிநேர நீர்வெட்டு

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில், இன்று(08) காலை 8 மணிமுதல் 16 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, தெஹிவளை – கல்கிஸை, கோட்டே, கடுவலை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும், கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதுதவிர, இரத்மலானை பகுதியிலும் இன்றைய தினம் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Comments are closed.